பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் செயலி: நீக்க கூகுள் மறுப்பு - இது எதற்காக..?

ஆப்ஷெர் என்ற பெண்களை கண்காணிக்கும் சர்ச்சைகுரிய செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.

ஒருவருக்கான தனிப்பட்ட விஷயங்களை நாம் ஆராய்வது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சவுதி போன்ற சில நாடுகளில் பெண்களை கண்காணிக்க ஆண்கள் பங்கு அவசியம் என்று சட்டமாகவே உள்ளது.

இந்நிலையில் ஆப்ஷெர் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவில் இருக்கும் ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகிறது.



இந்த செயலி பற்றிய பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலும் இந்தசெயலி மீறவில்லை என்பதால், அதை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க முடியாது எனதெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும் இந்த செயலியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில்,ஆப்பிள் நிறுவனம் ஆப்ஷெர் செயலியை ஆராய்ந்து வருகிறது. ஆனால்இன்னமும் ஆப்பிளின் செயலிகள் ஸ்டோரிலிருந்து ஆப்ஷெரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுள் மற்றும் ஆப்பிளின் இந்த செயலியில் காட்டும் செயல்பாடுகளும், பதில்களும் அதிருப்திஅளிப்பதாக அமெரிக்க கீழவை பிரதிநிதி ஜாக்கி ஸ்பையர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன்இயங்கும் ஆப்ஷெர், அடக்குமுறைக்கான செயலியாக செயல்படுவதாக பல பெண்கள் உரிமைஅமைப்புகளின் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


ஆனால் இந்த செயலி, சவுதி குடிமகன்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் மற்றும் வேலை செய்பவர்களின்நடவடிக்கைகளையும் அவர்கள் கடவுசீட்டு தகவல்களை வைத்து கண்காணிக்க இந்த செயலி வழிவகை செய்கின்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post